Tue. May 14th, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும்- அரச அதிபர்

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போது அவர்கள் தரம் மிக்க சமூகமாக மாறுவார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் 14ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று  (20) நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தின் தலைவர் த.செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் த.மகேசன், சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் செல்வி.அகல்யா செகராஜா, வடமாகாண விசேட கல்வி  உதவிக் கல்வி பணிப்பாளர் வி.விஸ்ணுகரன், ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்வி பணிப்பாளர்ஆர்.நிர்மலன், கரவெட்டி பிரதேச செயலக தலைமைப்பீட கிராம அலுவலகர் ராஜ்குமார்,  மருதங்கேணி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் வீ.கணேசலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சமூகத்திலே மாற்றுத் திறனாளிகள் பல தரப்பினர் காணப்படுகின்றனர். இக் குறைபாடுகள் பிறப்பினாலோ, மருத்துவ காரணத்தினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் அனைவரும் எமது சமூகத்திலே சமமான உரிமை கொண்டவர்கள்.  ஒரு சில குறைபாடுகள் காரணமாக அவர்களைப் புறம்தள்ள முடியாது.  நாங்கள் அனைவரும் அவர்களைப் பேணிப் பாதுகாத்து அவர்களின் தேவைகளை செய்து கொடுப்பது எமது கடமை. கைதடி நவில் பாடசாலை வாண்மைத் திறனுடைய, தொழிற்தேர்ச்சி மிக்க செவிப்புல  குறைபாடுகள் உள்ளவர்களை உருவாக்கியுள்ளது.அதனூடாக அரச திணைக்களத்தில் கடமையிலும் இருக்கிறார்கள். எனவே இவர்களை இனங்கண்டு அவர்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும். அத்துடன் இவர்களின் தேவைகளை எனக்கு அறியத்தருமிடத்து மாவட்ட அரசாங்க அதிபர் என்றவகையில் என்னாலான உதவிகளையும் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்