Tue. May 14th, 2024

மாணவர்களின் ஆளுமையை வளர்க்க தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் – உடற்கல்வி ஆசிரியர் கனகராசா

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு கிழமைக்கு ஒருநாளாவது விடுமுறை வழங்கி பூரண மனிதனாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர் கனகராசா தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களிடத்தே அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை அடுத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் ஆளுமைக்கும், முடிவெடுக்கும் திறனையும் மழு

தனியார் கல்வி நிலையங்கள் மழுங்கடிக்கின்றனர்.  இவர்கள் மீது ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கல்வி என்பது என்ன? ஒரு மாணவனை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வைப்பதாகும். இதனால் தான் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த எந்த போராட்டமாக இருந்தாலும் பல்கலைக்கழகம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் தற்போது பல பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி என்றால் கல்வி அவர்களுக்கு எந்த வகையில் துணைநிற்கிறது. வெறுமனவே புத்தக பூச்சிகளாக மாத்திரம் இருந்து விட்டு சமுதாயத்தில் நுழைந்து தனது தேவையை தானே பூர்த்தி செய்ய முற்படும் போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இதற்கு காரணம் பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றாமல்  தோல்விகளை சந்திக்காமயே ஆகும். விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பல தோல்விகளைச் சந்திக்கின்றனர். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என தம்மை தயார்ப்படுத்துகின்றனர்.
யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் தரம் 9 இற்குட்பட்ட மாணவர்களுக்கு அறநெறி வகுப்புகள், விளையாட்டு மற்றும் இணைபாட விதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்குடன் தனியார் கல்வி நிலையங்களுக்கு இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையில் யாருக்கு தேவை. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கே மிக அவசியம்.
தற்போது உயர்தர வகுப்புகளுக்கான தனியார் கல்வி நிலையங்கள் பல மாணவர்களை பாடசாலையில் நடைபெறும் நிகழ்விலேயே பங்குபற்றாது கட்டாயமாக தனியார் கல்வி நிலையங்களில் பங்குபற்ற வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.  தற்போது வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளுக்கு பாடசாலை அதிபரை விட, தனியார் கல்வி நிலைய நிர்வாகி மற்றும் ஆசிரியர்களிடம் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மாணவர்கள் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லவில்லை என்றால் மறு வகுப்பிற்கு வரும்போது வகுப்பறையில் தனியாக இருப்பிடம் அமைக்கப்பட்டு அதில் குறித்த மாணவர்களை இருத்தி வைக்கின்றனர். இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? உயர்தர வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலர் பாடசாலைகளில் கற்பிக்காது தனியார் கல்வி நிலையங்களில் தமது கற்பித்தல் தேர்ச்சி நுட்பங்களை செயற்படுத்துகின்றனர்.  இதனால் குறித்த ஆசிரியரிடம் பாடசாலைகளில் கற்ற போதிலும், தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் ஆளுமைகளை வளர்க்க அனைத்தர வகுப்பினருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்