Sun. May 19th, 2024

மன்னாா் மாவட்டத்தில் 2ம் நிலைக்கு தள்ளப்பட்ட கிறிஸ்த்தவா்கள்! 1ம் நிலையில் இஸ்லாமியா்கள்.

இலங்கையில் அதிக கிறிஸ்த்தவா்கள் வாழும் மாவட்டமாக அடையாளப்பட்டிருந்த மன்னாா் மாவட்டத்தில் தற்போது இஸ்லாமியா்கள் முதலிடத்தை பிடித்திருக்கின்றனா்.

ஆரம்பத்தில் சைவ மக்கள் அதிகமாகவும் அன்நியர் வருகையின் பின்னர் கடந்த 50 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் காணப்பட்ட மன்னார் மாவட்டத்தில் தற்போது

இஸ்லாமியர்கள் முதலிடத்தில் உள்ளதோடு கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் சைவ மக்கள் 3ம் நிலமைக்குச் சென்றுள்ளது.

இதன் பிரகாரம் தற்போது மன்னார் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 854 இஸ்லாமியர்கள் வாழ்கின்ற நிலைநில் றோமன் கத்தோலிக்கர்கள் 60 ஆயிரத்து 776 பேர் மட்டுமே வாழ்கின்றமை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் சைவ மக்கள் 28 ஆயிரத்து 247 பேர் மட்டுமே வாழ்கின்றமை 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மக்கள் 3 ஆயிரத்து 201பேர் வாழ்வதாகவும் புள்ளி விபரம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்