Sat. May 18th, 2024

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் -பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு.

மன்னார் மாவட்ட வருடத்தின் இறுதி விவசாயக் குழுக்கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை  (10) காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆரம்பமான விவசாயக் குழுக்கூட்டம் விவசாயிகளின் குறை நிறை தொடர்பாக பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது.
அந்த வகையில் கடந்த கூட்டக் குறிப்பின் விடயங்களும் அவற்றின் முன்னேற்றங்களும், சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் முன்னேற்றங்கள், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தேசிய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம், மாவட்ட விவசாயப் பிரிவில் மேற்கொள்ளப்படும் கடமைகளும் முன்னேற்றங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், கட்டுக்கரை குளதிட்ட முகாமைத்துவ குழு, விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கால்நடை பராமரிப்பு பற்றிய செயற்பாடுகள், வங்கி செயற்பாடுகள்  மற்றும் பனை அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசயப்பனிப்பாளர், நீர்பாசன திணைகளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர்,  பல்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும், விவசாய அமைப்புகளின் தலைவர், செயலாளர், பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்