Sat. May 18th, 2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு கொரோனா சந்தேக நபர்களுக்கு நடந்த பரிதாபம்-கடமையில் இருந்த வைத்தியர் அலட்சியம்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை (23) காலை ‘கொரோனா வைரஸ்’ தாக்கம் எனும் சந்தேகத்தில் கொண்டு செல்லப்பட்ட 6 மாத குழந்தை உற்பட இரண்டு பேரூக்கு பல மணித்தியாலங்கள் எவ்வித மருத்துவ நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை எனவும்,கடமையில் இருந்த சிங்கள வைத்தியர் அலட்சியத்துடன் செயற்பட்டதாக வைத்தியசாலையில் குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 6 மாத குழந்தை ஒன்றும் இளைஞர் ஒருவரும் கொரோனா வைரஸின் தாக்கம் என கருதி இன்று காலை திங்கட்கிழமை 9.45 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வெளி நோயாளர் பிரிவிற்கு நோயாளர்கள் வருகின்ற போது அவர்களை தரம் பிரிக்கும் வகையில் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறையில் வைத்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்ததன் பின் வெளி நோயளர் பிரிவில் உள்ள வைத்தியரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
பின்னர் அவர்களுக்கு விடுதி அனுமதி பதிவு செய்யப்பட்டு வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மாத குழந்தை ஒன்றும்,இளைஞர் ஒருவரும் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
எனினும் அவர்களை தரம் பிரிக்கும் அறைக்கு கொண்டு சென்று வெளி நோயளர் பிரிவில் உள்ள வைத்தியர் பார்க்கது நேரடியாக தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததோடு,குறித்த நேரம் கடமையில் இருந்த வைத்தியர் குறித்த இரு நபர்களையும் பார்வையிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு கொரோனா சந்தேக நபர்களையும் வைத்தியர்கள் வெளி நோயளர் பிரிவில் வைத்து பரிசோதனை செய்யாத நிலையில் அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பின்னர் குறித்த இரண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் சந்தேக நபர்கள் இருவரும் வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
வெளி நோயாளர் பிரிவில் எவ்வித பரிசோதனையும் இன்றியே தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த நேரம் கடமையில் இருந்த வைத்தியரை குறித்த கொரோனா வைரஸ் சந்தேக நபர்களுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வைத்தியசாலை அதிகாரி பணித்த போதும் குறித்த வைத்தியர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட குறித்த இரண்டு கொரோனா தொற்று சந்தேக நபர்களை தனிமைப்படுத்தும் நிலையத்தில் அனுமதித்த நியைலில் ஒரு சந்தேக நபரை வைத்தியர் மதியம் 1 மணியளவில் பரிசோதித்துள்ளார்.
இரண்டாவது சந்தேக நபருக்கான விடுதி அனுமதி (டிக்கட்) 3 மணிக்கு பதிவு செய்துள்ளனர்.அதன் பின்னரே குறித்த நோயளர் வைத்தியரினால் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு கொரோனா சந்தேக நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றையவர் மன்னார் பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்தியரின் செயற்பாடு குறித்து பலரும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் உடனடியாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்திடம் குறித்த சட்பவம் தொடர்பில் உரிய அறிக்கையை பெற்று,கடமையில் இருந்த பணியாளர்களிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்