Mon. May 20th, 2024

மன்னார் மாவட்டத்தில் சுண்டைக்காய் பயிர்ச் செய்கையாளர்கள் பாதீப்பு

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் மக்கள் பெருமளவான தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தோட்டச் செய்கையுடன் ‘சுண்டைக்காய்’ (திப்பட்டு) என்று அழைக்கப்படுகின்ற ஒரு மரக்கறி பயிர் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார், ஈச்சலவக்கை, பெரியமடு ஆகிய கிராமங்களில் சுமார் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த பயிர்ச் செய்கை பாரிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
 பல இலட்சம் ரூபாய் முதலிட்டு குறித்த பயிர்ச் செய்கையை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சுண்டைக்காய் யை வட மாகாணத்தில் உள்ள   மக்கள் விரும்பி உண்பது இல்லை. ஆனால் தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.தென்பகுதி மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது இந்த சுண்டைக்காய்.
குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகலவானவர்கள் தமது வாழ்வாதார தொழிலாக குறித்த பயிர்ச் செய்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சுண்டைக்காய் முற்றுவதற்கு முன் அவற்றை ஆய்ந்து சந்தைப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது காய் முற்றும் நிலையில் காணப்படுகின்றது.
கொரோனா அச்சுரூத்தல் காரணமாக அவற்றை ஆய்ந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.
தன்னிச்சையாக ‘சுண்டைக்காயை பயிரிட்ட தோட்ட செய்கையாளர்களின் நிலை கவலையளிக்கின்றது.நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம் மற்றும் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடங்கள் போன்றவற்றினால் தமது உற்பத்தி பொருட்களை கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத நிலையில் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருவதாக சுண்டைக்காய் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்