Wed. May 15th, 2024

மன்னாரில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும் மக்களின் நடமாட்டம் குறைவு.

காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(1) புதன் கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் நீக்கப்பட்ட போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அளவு ஆர்வம் காட்ட வில்லை.
காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படுகின்ற போது வழமை போன்று மன்னாரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தது.
எனினும் மன்னார் பகுதியில் மக்கள் நடமாற்றம் இன்றி காணப்படுகின்றது.
குறைந்த அளவில் மக்களின் நடமாட்டம் காணப்பட்டதோடு, தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.
மேலும் மன்னார் தினச் சந்தை மரக்கறி வியாபார நிலைய பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் உள்ளூர் மட்டத்தில் இடம் பெற்ற போதும்,குறித்த சேவைகள் திடீர் என இரத்துச் செய்யப்பட்டது.இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்