Sat. May 18th, 2024

மந்திகை வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதி புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு

13.06.2020. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நட்பு 98 அமைப்பினால் ஆண்கள் மருத்துவ விடுதி ஆறாம் லக்க விடுதி புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது 14 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் திறப்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர். ஆ.கேதீஸ்வரன் அவர்களும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் குமரகுரு அவர்களும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களும் நோயாளர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்திய உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஞாபகார்த்த திரை நீக்கம் செய்யப்பட்டு ஆறாம் நம்பர் விடுதியை பிராந்திய பணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார். அவர் உரையாற்றும்போது அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி போதியளவு அபிவிருத்தி செய்வதற்கு பற்றாக்குறை என்றும் பொது மக்களும் பொது அமைப்புக்களும் முன்வந்து அபிவிருத்திக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு  நீங்கள் செய்யும் பாரிய உதவியை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்தும் உங்களால் இயன்ற உதவிகளை செய்து வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் பேசும்போது வெளிநாட்டில் உள்ள பல அமைப்புகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிதிப் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். இவ்வாறான உதவிகளை பெற்று வைத்தியசாலையின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டுமென கூறியதுடன் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இன்று நடைபெற்ற வைத்தியசாலையின் ஆறாம் இலக்க வாட் விடுதி திறப்பு விழாவில் நட்பு அமைப்பின் நண்பர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்