Fri. May 17th, 2024

மந்திகை நோயாளர் நலன்புரி சங்கத்தில் ஊழல் நடவடிக்கைக்கு கோரிக்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மந்திகை நோயாளர் நலன்புரி சங்கம் 17 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதியினரின் நிர்வாகத்தின் கீழ்  தொடர்ந்து இயங்கி வருகின்றது.  நிர்வாக சபை மீது உறுப்பினர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் சிற்றூழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்படுள்ளதுடன் இவர்கள்  மீது சந்தேகம் அடைந்துள்ளார்கள்.  யாருக்கும் தெரியாமல் இவர்கள்  பல ஊழல்களை  17 வருடமாக நடத்தி வருகின்றார்கள் என்றும்  இவர்களை  உடனடியாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்திலிருந்து  வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையேல் நோயாளர் நலன்புரிச்சங்கம் ஒழுங்கான முறையில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டும். இதன் தலைவராக உள்ள வைத்திய அதிகாரியும் பொருளாளராக உள்ள ஆய்வு கூட அதிகாரியும் இந்த குளறுபடிகளில்  ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள்.  இவர்களின்  செயல்பாடுகள் பற்றி பல கோணங்களில் இருந்தும்  படித்த புத்திஜீவிகள் உட்பட பொதுமக்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

தேநீர் சாலை மற்றும் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் மூலம் மாதம் 2 லட்சம்  ரூபாவுக்கு மேல் வருமானம் வருகின்ற நிலையில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளபடாமல் வைத்தியசாலை உள்ளது.  இந்த பணத்திற்கு உரியவகையில் கணக்கும் பேணப்படவில்லை.  பொருளாளரின் நடவடிக்கைக்கு உடந்தையாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்பொறுப்பதிகாரி  இருப்பதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள். பொருளாளரை  நலம்புரி சங்கத்திலிருந்து நிறுத்தினால்  நோயாளர் சங்க சங்கம் ஒழுங்கான முறையில் நடைபெறும் என்று நலன்புரி சங்கத்தின்அங்கத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவர்கள் தொடர்ந்தும் இந்த சங்கத்தில் இருப்பார்களானால் தற்பொழுது வாட்டுகளில் உள்ள நாய்கள் IC வாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்படும் என்று வைத்தியசாலை ஊழியர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்