Fri. May 17th, 2024

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய அணி சம்பியன்

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை  ஐக்கிய விளையாட்டுக் கழகம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் பிரிவில் ப‌திவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டிகள் அல்வாய் நக்கீரன் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று சனிக்கிழமை  நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பொலிகை பாரதி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி 12:02 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்