Sat. May 18th, 2024

நெல்லியடி சந்தை வியாபாரிகளையும் மக்களையும் அவதி படுத்தும் பிரதேச சபை மற்றும் சுகாதார பகுதியினர்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய புதிய சந்தை,  கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களால்  சுகாதார சட்டங்கள் வரையறுக்கப்பட்டு  சந்தைக்கு செல்லும் முன் கதவும் சந்தைக்கு உள் செல்லும் கிழக்கு பக்கம் உள்ள இரு கதவுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில் சந்தை திறக்க அனுமதிக்கப்பட்டது.

பத்தாம் திகதி கடந்த புதன்கிழமை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி மக்களின் பாவனைக்காக சந்தைக்கு செல்லும் முன் கதவும் கிழக்கு பக்கத்தில் உள்ள இரு கதவுகளையும் திறக்குமாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிர்வாக தெரியப்படுத்தி இருந்தார்கள்.

பிரதேசசபையின் நிர்வாகமோ தங்களுக்கு எழுத்து முலம் தரப்படவில்லை என பின் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிதேச சபை நிர்வாகத்துக்கும் சுகாதாரப் பகுதியினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 

பிரதேச வியாபாரிகளும் பிரதேச சபைக்கு இது தொடர்பாக  கடிதம் மூலம் தெரியப் படுத்தி இருக்கிறார்கள். தங்களுக்கு வியாபாரம் மிகவும் குறைவு என்றும் இரு கதவுகளையும் திறந்து விடுமாறு கேட்டு இருக்கின்றார்கள். நிர்வாகமும் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை வரையும் திறக்கப்படவில்லை.இதனால் வியாபாரிகள் பல நஷ்டங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.பிரதேச சபையின் வேலை செய்யும் ஊழியர்கள் சந்தை வியாபாரிகளுடன் முரண்பாடாக நடந்து கொள்கின்றார்கள்.

ஒரு மணிக்கு பிறகு சந்தையில் வேலை செய்யும் எந்த ஊழியர்களையும் அங்கு காண முடிவதில்லை. இந்த நிலையில் சந்தை முன் கதவு திறக்கப்பட்டு இருக்கும் உள் சந்தையில் உள் கதவு திறந்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஒரு மணிக்குப் பிறகு திறக்கப்படும் அந்த முன் கதவுகளும் ஏன் காலையில் திறக்க முடியாது என பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்