Fri. May 17th, 2024

நெல்லியடியில் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நெல்லியடி நெல்லியடி நகர் பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து வியாபாரத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வெளி மாவட்டங்களில் இருந்து யாசகம் கேட்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நடமாடும் வியாபாரங்கள் சட்டரீதியற்ற முறையில் சுதந்திரமாக இயங்க தொடங்கியிருக்கின்றது. பிரதான வீதிகளின் வீதியோரங்கள், சந்திகள், வெற்று தோட்டக் காணிகள் என்பவற்றில் இக் கொரோனா காலத்திலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். நேற்று இரவு  நெல்லியடி பிரதான வீதியில் நாவலப்பிட்டி எனும் பிரதேசத்தில் இருந்து வந்த சிலர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இது தொடர்பாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சுரேரஞ்சன் அவர்களுக்கு பொதுமக்களால் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து  விரைந்து செயற்பட்ட வர்த்தக சங்கத்தின் தலைவர்  கரவெட்டி சுகாதார பிரதேச அதிகாரி மற்றும் நெல்லியடி பொலீஸார் ஆகியோருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் அகற்றப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்