Sun. May 19th, 2024

நெல்லியடியில் விபத்து, பொலிஸாரின் மெத்தன போக்கு

21.08.2020 இன்று இரவு 7 மணியளவில் நெல்லியடி புதிய சந்தை பகுதிக்கு அருகில் 750 வீதியில் வீதி விபத்தொன்று  இடம்பெற்றது. கார் செலுத்திவந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் ஓடிவந்த ஒருவருடன் மோதுண்டதில் கார் முன் பக்கம் உடைந்து நிலத்தில் விழுந்து கிடக்க காணப்பட்டது. வீதி போக்குவரத்து போலீசார் அவ்விடத்தில் இல்லை. யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடம் வகிக்கும் பிரதான நகரம் நெல்லியடி. அங்கு பாதுகாப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காலை இருந்து மாலை இரவு 9 மணி வரையும் சன நெரிசல் மிக்க இடமாக காணப்படுகின்றது. போலீசார் போதிய அளவு இல்லாததால் பாதுகாப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. வீதி விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்ற நிலையில் இந்த நகரை பகுதியைப் பாதுகாப்பது நெல்லியடி பொலிலீசாரின் கடமை. போதியளவு நெல்லியடி பொலிசில் பொலீசார் இல்லாததினால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பகல் 2 மணிக்கு பிறகு18 -25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளில் தாறுமாறாக திரிகின்றார்கள்.  தங்களுடைய நேரத்தை நெல்லியடி நகரப்பகுதியில் கழித்து வருவதனால் வீதிகளில் வருவோருடன் சேட்டைகளும் விடுவதால்  இடையூறுகள் ஏற்படுகின்றது.  சில மாதங்களாக மிக அமைதியாக இருந்த நகரப்பகுதியில் இளைஞர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனை கவனத்தில் கொள்வாரா.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்