Fri. May 17th, 2024

நியூ யார்க்கில் புதைகுழிகள் வெட்டப்பட்டு பாரியளவில் சடலங்கள் அடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், பாரியளவிலான புதைகுழிகள் வெட்டப்பட்டு சவப்பெட்டிகள் அடுக்கடுக்காக புதைக்கப்படும் காட்சிகள் ட்ரான் கேமரா மூலம் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

சவப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குழிக்குள் இறங்க தொழிலாளர்கள் ஏணியைப் பயன்படுத்தி ஏறி இறங்குவது இந்த படங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

இந்த புதைகுழிகள் நியூ யார்க்கில் ஹார்ட் தீவு ஆகும், இதுமுன்னர் நியூ யார்க் நகரில் உள்ள உறவினர்கள் அல்லது இறுதி சடங்கு செய்ய முடியாதவர்களுக்கு அடக்கம் செய்வதர்க்கு பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நியூயார்க் நகரத்தில் இப்போது எந்த ஒரு நாட்டையும் விட அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் உள்ளன.

கோவிட் -19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் வியாழக்கிழமை 10,000 ஆல் அதிகரித்து 159,937 ஆக இருந்தது, அவர்களில் 7,000 பேர் இறந்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்