Sun. May 19th, 2024

நாளை வெளியிடப்படவுள்ள புதிய நியமனம் பெறும் 50,000 பேரின் பெயர் விபரம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை திங்கட்கிழமை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அவ் அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு 100,000 தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரி தெரிவு செய்தல் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக பல்துறை அபிவிருத்தி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தமையால் இவ்வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.எனினும் தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ளதால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான தொழில்களில் அமர்த்துதல் அந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் செப்டெம்பர் 02ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்