Thu. May 16th, 2024

நாளை பாடசாலைகள் நடைபெறுமா? முடிவுகள் யார் கையில்?

தீபாவளி தினத்தன்று விடுமுறை வழங்கும் பாடசாலைகள் குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரிடம் உரிய முறையில் விடுமுறை பெறப்பட்டு பதில் பாடசாலை நடாத்துவது தொடர்பாக அறிவிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தீபாவளியை தினத்தை கொண்டாடும் முகமாக நாளை 13ம் திகதி  திங்கட்கிழமை தமிழ்மொழி மூலமான பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டால் பதில் பாடசாலை 18ம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வடமாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சிலருடன் கலந்துரையாடப்பட்ட போது, கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டதற்கே தாம் செயற்பட முடியும்.  சில பத்திரிக்கைகளில் நாளை பாடசாலை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை நாளை குறைவாக இருப்பதால் பாடசாலைக்கு அதிபர்கள் அனுமதியை பெற்று விடுமுறை வழங்க வேண்டும்.
இருப்பினும் எதிர்வரும் 18ம் திகதி கந்தசஷ்டி விரத இறுதிநாள்,  சூரன்போர் நடைபெறும் இதனால் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியடையவும் உள்ளது.
இதுதொடர்பாக கல்வியியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
 தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் விடுமுறை வழங்க கோரியமை  தவறான செயற்பாடாகும்,  இதனாலேயே இவ்வளவு குழப்ப நிலை உருவாகியுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை எதற்காக கோரப்பட்டது. ஆசிரிய சங்கங்கங்கள் மாணவர்களின் கல்வியிலும் அக்கறை செலுத்த வேண்டும். அத்துடன் நாளை தமது பாடசாலை நடைபெறுமா? பெறாது? என்பது தொடர்பாக பல அதிபர்கள் தமது குழுவில் இன்னமும் பதிவிடவில்லை. இதனால் நாளை பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதா? அல்லது விடுவதா? எனும் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு ஆசிரிய சங்கங்கள் என்ன முடிவு சொல்லப் போகிறார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்