Thu. May 16th, 2024

நாமல் ராஜபக்ஷ வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டார்

வடமராட்சி பகுதிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டார். யாழ் மாவட்டத்தில் கொவிட் 19  தடுப்பூசிகளை ஏற்றும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளான கரவெட்டி மேற்கு J/363 கிராம அலுவலர் பிரிவில் யா/ஸ்ரீநாரதா வித்தியாலயத்தையும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் யா/வட இந்து மகளிர் கல்லூரியையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவருடன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் உட்பட பலர் வருகை தந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்