Thu. May 16th, 2024

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பே பிரதமர் பதவி குறித்து முடிவு -சஜித் பிரேமதாச

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக அடுத்த மாதம்
பதவியேற்ற பிறகு யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பார் என்று நேற்று கூறினார்.

ஹொரானவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தனது எதிர்கால நிர்வாகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு மட்டுமே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற அமைச்சுக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“கட்சிக்குள் எங்களுக்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகள் இருந்தன, அவை மிகவும் வெற்றிகரமாகவும், இணக்கமாகவும் தீர்க்கப்பட்டன. பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெறும் நபரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் , பிரதமர் பதவி குறித்த பிரச்சினை ஒரு சின்ன விடயம் என்று அவர் தெரிவித்தார் .

இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பேசிய திரு. பிரேமதாச, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிற நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்துடனும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறினார். எந்தவொரு சர்வதேச பிரச்சினையையும் வலுவான முதுகெலும்புடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

தனது பிரதான போட்டியாளரான ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், போருக்கு தலைமை தாங்கியவர் அவரும் அவரது மூத்த சகோதரரும் தான் என்று பெருமையாகக் கூறியவர் பின்னர் போரில் முன்னணியில் என்ன நடந்தது என்பதற்கு இராணுவத் தளபதி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார் . இது பாதுகாப்புப் படையினரையும் இராணுவ தளபதியையும் முற்றிலும் காட்டிக்கொடுக்கும் செயல் , இப்படியான செயலை எனக்கு என்ன நடந்தாலும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்