Sat. May 18th, 2024

நடுவானில் குலுங்கிய விமானம் 36 பேர் காயம்.

அமெரிக்காவின் Phoenix சர்வதேச விமான நிலையத்தில் இருந்து to Honolulu மாநிலத்திற்கு பறந்துகொண்டிருந்த Hawaiian Airlines – Airbus A330-200 விமானம் நடுவானில் வானிலை மாற்றத்தால் மோதல், அழுத்தம் (Turbulence) ஏற்பட்டு குலுங்கியதால் 36 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் விமானமும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளது.

விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஜான் ஸ்னூக் கூறுகையில், “சமீபத்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை” விமான நிறுவனம் சந்திக்கவில்லை என்றார். விமானத்தில், 278 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்தனர், ஊடகங்களுக்கு கூறினார்.

ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் குறைந்தது 36 பேர் காயமடைந்தனர், 20 பேர் அவசர அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,

11 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர மருத்துவ சேவைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 14 மாத குழந்தை ஒன்றும் இருந்தது.

நோயாளிகளின் காயங்களில் தலையில் பலத்த காயம், கீறல்கள், சிராய்ப்பு மற்றும் சுயநினைவு இழப்பு ஆகியவை அடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காயமடைந்தவர்களில் மூன்று பணியாளர்களும் அடங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சிறிய காயங்களுக்கு விமான நிலையத்தில் பல விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது, மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டனர்” என்று ஹவாய் ஏர்லைன்ஸ் ருவிட் செய்துள்ளது

278 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் விமானம் ஹொனலுலுவில் தரையிறங்குவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு கொந்தளிப்பு ஏற்பட்டது. எனினும் விமானி சாதூரியமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்