Thu. May 16th, 2024

நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேளைத்திட்டத்திற்கு என தென் பகுதியில் இருந்து வருகை தர இருந்த பணியாளர்கள் வருகை நிறுத்தம்-

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேளைத்திட்டத்திற்கு என தென் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மன்னாரிற்கு வருகை தர இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் காரணமாக அவர்களின் வருகையை உடன் நிறுத்தி உள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று(29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
தற்போது நாட்டில் கொரோனா வைரஸின் பாதீப்பு நிலை ஏற்பட்டுள்ளது.எமது மாவட்டத்தில் இது வரை எவ்வித பாதீப்புக்களும் இல்லை.
தற்போது மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேளைத்திட்டத்திற்கு என தென் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மன்னாரிற்கு வருகை தர இருந்தனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மேலதிக அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு உடனடியாக தென் பகுதியில் இருந்து மன்னாரிற்கு வரும் பணியாளர்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அதற்கமைவான அவர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.
 தற்போதைய சூழ்நிலையில் மக்களை பாதுகாப்பது மட்டுமே எமக்கு தேவை.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர முடியும்.ஆனால் தற்போது வரை எவ்வித பாதீப்பும் இல்லாத எமது மாவட்டத்திற்கு தொற்றை ஏற்படுத்த நாம் துணை நிற்கக்கூடாது.
இவ்விடையத்தில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்