Fri. May 17th, 2024

தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் கூட்டமைப்பு காத்திருக்க முடிவு

பிரதான கட்சிகளின் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கிறார்கள் என்பதை பொறுத்தே எங்களின் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இதனால அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும்வரை பொறுத்திருந்து முடிவெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நாளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி மற்றும் 1 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அதற்கு முதல் வெளிவராது என்றே கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன

மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே இது வரையில் 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள நிலையில் ஏனைய கட்சிகள் என்ன கூறுகின்றனர் என்பதை அறியவேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.
இதே நேரம் கோத்தபாய ராஜபக்ச இந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்ததுடன் , சஜித் பிரேமதாசாவும் சிங்கள வாக்குகளை இழக்க வேண்டி வருமென்பதால் கூட்ட்டமைப்பினரை சந்திக்க பின்னடிப்பதாகவும் தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்