Wed. May 15th, 2024

தேர்தலை இலக்கு வைத்து அவசரமாக திறக்கப்படும் விமானநிலையம்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையத்தில் விமனநிலையத்துக்கு தேவையான எந்த பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்த படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவது போல பொதிகளை ஸ்கேன் செய்யும் எந்திரம் மற்றும் இதர பாதுகாப்பு எந்திரங்கள்   இன்னமும் விமான நிலையத்தில் பொருத்தப்படவில்லை என்று தெரியவருகிறது. இதே நேரம் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட மாட்டாது என்றும் தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளது. இவை அடுத்த மாத கடைசியில் அல்லது மேலும் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.
மேலும் இந்த விமான நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கூட சர்வதேச விமனநிலையமாக இந்தியாவுக்கு சென்றுவர பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இருந்தே ரத்மலான விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் பலாலி விமானநிலையத்தில் தரை இறங்கியே மெட்ராஸ் (சென்னை) விமான நிலையத்துக்கு சென்றுள்ளது. இத விமான நிலையத்தில் ஆங்கிலேயர்களின் போர்விமானகள் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது .

இது 1980 கள் வரை போர் ஆரம்பமாகும் வரை ஒரு பிராந்திய சர்வதேச அந்தஸ்துடன் பலாலி விமான நிலையம் என்றே அறியப்பட்டிருந்தது. தற்பொழுது அதற்கு புது வடிவம் கொடுத்து அரசியல் சாயம் பூசி தற்போதைய அரசாங்கமே பூச்சியத்தில் இருந்து இந்த விமான நிலையத்தை உருவாக்கியது என்ற பெயர் எடுப்பதற்காவே இதன் பாரம்பரிய பெயரை மாற்றி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று மாற்றியுள்ளார்கள். இதற்கு எங்கள் அரசியல் வாதிகளும் உடந்தையாகி சென்றுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்