Fri. May 17th, 2024

தேசிய மட்ட கால்பந்தாட்டம்உடுப்பிட்டி அ.மி.கல்லூரி அரையிறுதிக்கு தகுதி

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடரில்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடர் கொழும்பு சிற்றி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரின் காலிறுதியாட்டதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் அல் மீனா கல்லூரி அணி மோதியது.
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் பல நிமிடங்கள் கோல் எதனையும் இரு அணிகளாலும் போட முடியவில்லை. இருப்பினும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி வீரர் ஹரிசுதன் மிகச் சிறப்பான கோலைப் போட இடைவேளைக்கு முன்னர் 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் குருநாகல் அல் மீனா கல்லூரி அணி வீரர் ஒரு கோலைப்போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி  3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்