Fri. May 17th, 2024

தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் வடமாகாணம் 121 பதக்கங்கள் குவிப்பு

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் வடமாகாணம் 121  பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு,  வடமாகாணத்திற்குட்பட்ட கல்வி வலயங்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் 26 முதலாமிடம், 8 இரண்டாமிடம் ஒரு மூன்றாமிடம் உட்பட 35 பதக்கங்களையும், வலிகாமம் கல்வி வலயம் 15 முதலாமிடம், 8 இரண்டாமிடம், 4 மூன்றாமிடம்  உட்பட 27 பதக்கங்களையும், வடமராட்சி கல்வி வலயம் 8 முதலாமிடத்தையும்,  3 இரண்டாமிடத்தையும்,  3 மூன்றாமிடங்கள் உட்பட 14 பதக்கங்களையும்,
தென்மராட்சி கல்வி வலயம் 9 முதலாமிடத்தையும், ஒரு இரண்டாமிடம், 3 மூன்றாமிடங்கள் உட்பட 13 பதக்கங்களையும்,
முல்லைத்தீவு கல்வி வலயம் 9 முதலாமிடத்தையும் 2 இரண்டாமிடம்,  ஒரு மூன்றாமிடம் உட்பட 12 பதக்கங்களையும்,
வவுனியா தெற்கு கல்வி வலயம் 6 முதலாமிடம், 4 இரண்டாமிடம், 2 மூன்றாமிடம் உட்பட 12 பதக்கங்களையும்,  கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் 4  முதலாமிடம்,  ஒரு இரண்டாமிடம் உட்பட 5 பதக்கங்களையும்,  கிளிநொச்சி வடக்கு மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயங்கள் ஒவ்வொரு முதலாமிடத்தையும், தீவக கல்வி வலயம் ஒரு இரண்டாமிடத்தையும் பெற்று வடமாகாணம் ஒட்டு மொத்தமாக 121 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்