Thu. May 16th, 2024

தென்மராட்சியில் சிறப்பாக இடம்பெற்ற 2020 க்கான உலக மகளீர்தின நிகழ்வுகள்

தென்மராட்சியில் 2020 க்கான உலக மகளீர்தின நிகழ்வு இன்று (08) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வனப்புறு வனிதையாரால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வானது தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெற்றது.

திருமதி பவுலினா சுபோதினி தயாளராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சசிகலா ரவிராஜ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் செல்வி அம்பிகா சற்குணானந்தன், உளநல வைத்திய அதிகாரி திருமதி முல்லை பரமேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இதில் கருத்துரைத்த திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்துங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அம்பிகா சற்குணானந்தனின் மகளீர் தின உரையில் கூறுகையில்.. பெண்களை பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது. மற்றும் பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதற்கு ஆணாதிக்க சமுதாயம் தான் காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். பெண்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஆண்களின் ஆதரவு வேண்டும் எனவும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 


இந்நிகழ்வில் கருத்துரைத்த சுமந்திரன் அவர்கள் தெரிவிக்கையில்.. பெண்களுக்கு அரசியலிலும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் இன்றைய நிலையில் ஆணாதிக்க சமுதாயமே பெண்கள் மீதான வன்முறைக்கும் விமர்சனத்திற்கும் உட்பட காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதில் பல கலை நிகழ்வுகளும் அரங்கேறி இருந்தன.

மேலும் குறித்த மகளீர் தின நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர் இம்மாணுவேல் ஆனோல்ட் மற்றும் நகரசபை,பிரதேசசபை தவிசாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பெண்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்