Fri. May 17th, 2024

தாய்தேசம் அறக்கட்டளையின் ஒருவருக்கு ஒரு கிலோ கோதுமை மா

தாய்தேசம் அறக்கட்டளையின் ஒருவருக்கு ஒரு கிலோ கோதுமை மா என்ற திட்டத்திற்கமைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி ஏழை மக்களின் பசி நீக்கும் மருந்தாக ஒரு கிலோ கோதுமை மா திட்டத்தினை கைதடி மறவன்புலவு பிரபாகரன் ஆரம்பித்துள்ளார்

கொரானா மற்றும் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள தென்மராட்சி மக்களுக்கு ஒரு பயனாளிக்கு ஒரு கிலோ கோதுமை மா என்ற திட்டம் ஒன்றினை ஆரம்பித்து கைதடி மறவன்புலவு பிரபாகரனும் அவ்வூர் இளைஞர்களும் சேர்ந்து 8/4/2020 புதன்கிழமை தொடக்கம் கோதுமை மா பொதிகளை வழங்கி வருகின்றனர்,

பசி நீக்கும் திட்டத்தின் கீழ் கோவிலாக்கண்டி மறவன்புலவு கைதடிநாவற்குழி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு கிலோ மா வீதம் (அரச உத்தியோகத்தர்கள் உட்பட)
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து கிலோ மாவினை குடும்ப எண்ணிக்கைக்கேற்ப வழங்கியுள்ளனர்

பிரதேசத்தை சேர்ந்த தன்னார்வாளர்களின் அதிரடியான அன்பளிப்பில்
குறிப்பிட்ட சில இளைஞர்களின்  விடா முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்தும் தமது சேவையை வழங்கி வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்