Fri. May 17th, 2024

தனிமைப்படுத்தியவர்களை தாக்க முற்பட்டவரின் குடும்பமும் தனிமைப்படுத்தலில்

கொரேனா கட்டுப்பாட்டுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வாளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரை தாக்க முற்பட்டவர் பொசுகாதார பரிசோதகர்களால் இனங்காப்பட்டு குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார். அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்கான சட்டநடவடிக்கையும் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் இன்று(06/11/2020) பருத்தித்துறையில்  இடம் பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த சகபணியாளர்கள் ஐந்து பேர் குறிப்பிட்ட நிறுவனத்தினுள் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் அவர்களினால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று  வியாழக்கிமை இரவு(05/06/2020) நபரொருவர் தனிமைப்படுத்தப்பட்ட அவ் வளாகத்தினுள் அத்தமீறி நுளைந்து கல்வீசித்தாக்குல் நடத்தியதோடு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரை உள்ளே சென்று தாக்கவும் முயற்சித்துள்ளார். சம்பவம் அறிந்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தர சம்பந்தப்பட்டவர்  தப்பியோடி விட்டார். குறித்த சம்பவத்தை தனது கைத்தொலைபேசியில் காணொளியாக்கிய அங்கு தனிமைப்படுத்தப்ட்டிருந்த இன்னொருவர் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்டிற்கு வட்சப் ஊடாக அனுப்பியுள்ளார். குறித்த காணொளி ஆதாரத்தைக்கொண் புலன்விசாரணையில் ஈடுபட்ட பொதுசுகாதாரபரிசோதகர் பொதுமக்கள், பருத்தித்துறை நகர்பகுதி பொதுசுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் உதவியுடன் சம்மந்தப்பட்டநபரின் வீட்டை இனங்கண்டு குறித்த நபரை விசாரணைகளுக்கு உட்படுத்தி அங்கு அவர் இரவு கலவரத்தில் ஈடுட்டபோது அணிந்திருந்த ஆடைகளையும் இனங்கண்டனர். இதைத்தொடர்ந்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நபரை குடும்பத்தோடு தனிமைப்படுத்தியுள்ளனர். கொரோனாக் கட்டுப்பாட்டுக்காக தனிமைப்படுத்தப்படுவோரை பாதுகாக்கவேண்டியது பொதுமக்கள் கடமையெனவும் இவ்வாறு அந்துமீறுவோர் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்டுவார்கள் என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்