Sun. May 19th, 2024

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மக்களில் இரண்டாவது தொகுதியினர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

கண்டகாடு மற்றும் புனானி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 201 நபர்களின் இரண்டாவது தொகுதி இன்று காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது தொகுதிக்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் இராணுவத்தால் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட 311 பேர் முதல் தொகுதி, 11 பேருந்துகளில் மாதாரா, கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேற்றைய தினம் (2020-03-24) அனுப்பிவைக்கப்பட்டனர், மேலும் 6 லாரிகளில் அவர்களது உடமைகள் ஏற்றிச் செல்லப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து COVID-19 தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 17 நபர்கள், இப்போது மைலடியில் சிறப்பாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 47 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 3224 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்