Sun. May 19th, 2024

ஜனாதிபதி தேர்தலில் 3 பேர் பரிந்துரை

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் நாடாளுமன்றத்தில் 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி ராஜபக்ஷக்களின் பின்னணியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , பெரமுனவின் ஒரு தரப்பு , எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் டலஸ் அழகப்பெருமவும் , ஜேவிபியின் அனுரகுமார திசாநாயக்கவும் போட்டியிடவுள்ளனர் . டலஸ் அழகப்பெருமவின் பெயரை சஜித் பிரேமதாசா முன்மொழிந்தார் . ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார் . ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்த்தன முன்மொழிய , மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார் .

சஜித் தனது ஆதரவை டலஸ் அழகப்பெருமாளுக்கு வழங்கியுள்ளார். டலஸ் அழகப்பெருமாள் ஜனாதிபதியானால் சஜித் பிரதமராவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்