Tue. May 14th, 2024

ஜனாதிபதிபதி செயல் திட்டத்தின் கீழ் பொலிஸ் தலைமையில் நெல்லியடி நகரம் துப்புரவு

29 11 2019 இன்று காலை ஜனாதிபதியும் வேலைத் திட்டத்திற்கு அமைய நெல்லியடி நகர பகுதி துப்புரவு செய்யப்பட்டது.  யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள போலீஸ் ராணுவம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் கிராம சேவையாளர்கள்,  சுகாதார உத்தியோகத்தர்கள்,  பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பிரதேச சபை தவிசாளர் நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் நெல்லியடி வர்த்தக சங்கதினர் ஆகியோர்  கலந்துகொண்டு இருந்தார்கள். வடமராட்சிப் பகுதியில் டெங்கு நோய் அதிகமாக பரவி வரும் காரணத்தினால் இந்த வேலைத் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார்கள். நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ் ரஞ்சன் பேசும்போது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நெல்லியடி நகர அபிவிருத்திக்கு வர்த்தக சங்கத்தினால் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார். ஜனவரி மாதத்திலிருந்து பொலிசார் கரவெட்டி பிரதேச செயலர் கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் மூலமாக நகர அபிவிருத்தி செய்யப்படும் எனவும்  நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்