Tue. May 14th, 2024

சென். றோக்ஸ் விளையாட்டு மைதான திறந்துவைப்பு. பிரமத விருந்தினராக முதல்வர் பங்கேற்பு

முதல்வர் ஆனல்ட் அவர்களின் சிபாரிசில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் கம்பரெலிய துரித கிராம அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1 மில்லியன், மற்றும் கழகத்தின் 2.2 மில்லியன் நிதியில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் குருநகர் சென். றொக் விளையாட்டுக்கழக மைதானம் விளையாட்டுக் கழகத்தின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு 2/2/2020 கழகத் தலைவர் திரு. அல்பிறட் டன்சன் (மதன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், முதல்வரின் வட்டார இணைப்பாளர், அருட்தந்தை, மதகுருமார்கள், யாழ்ப்பாணம் குருநகர் சென். றொக் விளையாட்டுக்கழக நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்