Sun. May 19th, 2024

சுமூகமாக இடம்பெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கூட்டம், இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பு

30.04.2020இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சபையின் ஆரம்பத்தில்  ஐந்து நிமிடம் அவை வணக்கம் செலுத்தப்பட்டது. முதலாவது நிகழ்வாக கொரோனா சம்பந்தமாக ஒவ்வொரு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறினார்கள் தவிசாளர்  கொரோனா சம்பந்தமான கருத்துக்களுக்கு  உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். கொழும்பு மாநகரில் சகல வசதிகளும் நிறைந்த இடங்களில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கக்கூடிய வசதி இருந்தும் அங்கே அமைக்காமல் எமது பிரதேசங்களில் அமைப்பதற்கான முயற்சிகள் எடுப்பதாக தெரிய வருவதால் இங்கு இடைத்தங்கல் முகாம் அமைப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  இராணுவமும் பொலிசாரும் தங்களை உயிரை தியாகம் வைத்து கடமையில் இருப்பதை இட்டு நாங்கள் அவர்களுக்கு நன்றியையும்  வாழ்த்துகளையும் உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் . எமது மக்கள் கொரோனா சம்பந்தமான சகலநடவடிக்கைகளை எடுக்கும் பொழுது அவர்கள் தங்களுடைய ஒத்தாசை எங்களுக்கு வழங்குகின்றார்கள் என்றும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்கள் .

மேலும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலிருந்தும்  சந்தைகளை  புனரமைப்பு செய்து அங்கு சிறிய சிறிய சந்தைகளை  முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. தொற்று நீக்கும் மருந்து சகல இடங்களிலும் அடிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது. இன்று சபையில் நடைபெற்ற கூட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டே இருந்தது தவிசாளர் அவர்கள் தன்னுடைய நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார்.

உறுப்பினர்கள் செவிமடுத்து நல்ல தீர்மானங்களுக்கு முன்மொழிந்தார் கள். மரக்கறி வியாபாரங்கள் ஒழுங்கான முறையில் நடைபெறுவதாகவும் குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்வதாகவும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் தவிசாளர் கூறினார். உறுப்பினர்கள் எல்லாரும்  முக கவசம் அணிந்து இன்று சபைக் கூட்டத்தில் சமூகம் அளித்திருந்தார்கள்.

பல இடங்களிலிருந்து மரக்கறிகள் இங்கு கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும் எனவும் ஆலசோனை கூறினார்கள்.  இங்கு கொண்டு வருவதினால் இங்கு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் எடுத்துக்கூறினார்கள். இன்றய கூட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றதுடன் தீர்மானங்களும் அமைதியாக நிறைவேற்றப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்