Tue. May 14th, 2024

சீனா அரிசியை சமைப்பது எப்படி என விளக்கம் சொன்ன சீன பிரதி தூதுவர்.

சீனா வழங்கிய 10 கிலோ அரிசிசை சமைக்கும்போது களியாகிறது அல்லது பசைத்தன்மை அதிகம் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுவதாக ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணம் வருகைதந்த சீன தூதரக பிரதி தூதரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சீன பிரதி தூதுவர் ஹ வெய் , இங்கு சமைக்கும் முறை முறையில் தான் பிரச்சினை இருக்கிறது.எமது நாட்டு அரிசியை மிருதுவான வெப்ப நிலையில் சில நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்

சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் நிவாரணப் பொதி வழங்கிகளை வைத்தார் .

சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ வெய் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்.

உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறோம்.

பாடசாலைகளுக்கான இந்த உதவி.அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தீர்மானித்துள்ளோம்.

எமக்கு கொழும்பில் உள்ள மக்கள் மட்டும் நண்பர்கள் அல்ல யாழ்ப்பாண மக்களும் எமது நண்பர்களே.யாழ்ப்பாண மக்கள் மத நம்பிக்கையில் வேறுபட்டாலும் ஒரே நாட்டு மக்களாகவே நாம் பார்க்கிறோம். உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உரிய நேரத்தில் உங்களுக்கு உதவுகிறோம். எங்களுக்கிடையிலான உறவு சமூக அல்லது குடும்ப உறவாக அமைய வேண்டும். இந்த உதவி ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் மேலும் பல உதவிகளை வழங்குவோம். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்