Thu. May 16th, 2024

சீனாவில் இருந்து அதிகவிலைக்கு தடுப்பூசி வாங்கும் இலங்கை

இலங்கை அரசாங்கம் ஒரு தடுப்பூசியை 15 டாலருக்கு சீன அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் நாட்டுக்கு இதே தடுப்பூசியை 10 டாலருக்கு விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளதுடன் பங்களாதேஷ் நாட்டுக்கான விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அஸ்ட்ரா ஸினிக்கா தடுப்பூசியை 5 டாலருக்கு கொள்வனவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அஸ்ட்ரா ஸினிக்கா தடுப்பூசி சீனா சினோபார்ம் தடுப்பூசியை விட வினைத்திறன் குறைந்தது என்பதும் குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்