Fri. May 17th, 2024

சாதனைகள் புரிய வேண்டுமாக இருந்தால் சாதிப்பேன் என்ற எண்ணத்தை மனதில் உறுதிபாக நிலை கொள்ள செய்ய வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

சாதனைகள் புரிய வேண்டுமாக இருந்தால் சாதிப்பேன் என்ற எண்ணத்தை மனதில் உறுதிபாக நிலை கொள்ள செய்ய வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு “கல்விக்கு குரல் கொடுப்போம் கற்றலை மேம்படுத்துவோம்” என்னும் திட்டத்தில் கற்றல் உபகரணமும் விளையாட்டு உபகரணமும் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சங்க தலைவர் மேலும் தனதுரையில் சாதனை என்பது சாதாரண விடயமல்ல அதை நிகழ்த்துவதற்கு பயிற்சிகள் மட்டும் போதுமானது அல்ல, நல்ல உளத் திடமும் புறச்சூழல் காரணிகளின் சாதகமான தன்மையும் காணப்பட வேண்டும். புலிக்கு பலம் அதன் வேகம், சிங்கத்திற்கு பலம் கர்ச்சனை, யானைக்கு பலம் தும்பிக்கை அதே போல உங்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படும் அபரஜிதமான பலத்தை இனங்கண்டு கொண்டால் அவர்களும் சாதனையாளர்களே.
விளையாட்டு என்பது தனித்துப் போட்டிகள் வெற்றிகள் என்பதை தாண்டி பொழுதுபோக்கு, தொற்றா நோய்களில் இருந்து விடுபடல், தேசிய அணியில் இடம்பிடித்தல், பொருளாதாரத்தை ஈட்டுதல் போன்ற நல்ல செயல்பாடுகள்  முன்னெடுக்கப்படுகின்ற போதும் இலங்கையிலே பொருளாதாரத்தை ஈட்டுகின்ற நிலை உருவாகவில்லை. மாறாக விளையாட்டில் ஈடுபடுகின்றவர்கள் பொருளாதாரத்தை இழக்கின்றனர். இருந்த போதும் உடல் உள சமூக ஆன்மீக நிலையை உருவாக்க விளையாட்டு அவசியமாகின்றது. எனவே முல்லைதீவு இடர்பட்டு இறுமாப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கும் மண். மாகாணப் போட்டியில் பல சாதனைகளை புரிந்த மண்ணில் கொக்கு தொடுவாய் மகாவித்தியாலய மாணவிகளும் சாதனை புரிந்துள்ளார்கள். அவர்கள் தேசியத்திலும் சாதிக்க வாழ்த்துக்கள் என தனது உரையை நிறைவு செய்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்