Sun. May 19th, 2024

சர்வதேச விமான சேவைகள் குறித்து விளக்கம்

எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது ஒழுங்குகள் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 4 விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைவாக இலங்கையில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தல மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் விமான சேவையை போன்று நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கும். இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையான கால அட்டவணை எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்