Fri. May 17th, 2024

கோத்தாவுக்கு பிரச்சினை என்றால் சமல் ராஜபக்ச போட்டியிடுவார்

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற்றுவரும் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவி வேட்புமனுத்தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கூட்டணி கட்சிகளிடையே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிரணியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களில் ஓருவரான வாசு தேவ நாணயகார தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்படும் சட்ட சிக்கல் குறித்தும் பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சட்ட நிபுணர்பகளிடம் ஆலோசனையினை பெற்றே பின்னரே அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது இலங்கை குடியுரிமையினை தொடர்புப்படுத்திய சட்ட சிக்கல் நிலையே ஏற்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்