Fri. May 17th, 2024

கோதாவுடன் இணையும் ஹசன் அலி மற்றும் பஷீர் செகுதாவூத்

பொதுஜன முன்னணி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்க முன்னாள் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.பி. ஹசன் அலி மற்றும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் செகுதாவூத் முடிவு செய்துள்ளனர்.

முஸ்லீம் காங்கிரஸ்ன் மேலும் பல உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் கோதபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்