Mon. May 20th, 2024

கொரோனா அபாய வலயங்களுக்கு மே 11 ஆம் திகதி திங்கள் வரை ஊரடங்கு

கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டதுமானது எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக்கபிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, களுத்துறை, கம்பா மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர, நாட்டின் 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மே 06ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை தளர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மே 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 11ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்