Sat. May 18th, 2024

குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருட்டு

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்

கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. இருப்பினும், குறித்த பாகங்களை சாதாரண மக்களால் அதன் ஆணிகள், நட்டுக்கள் என்பவற்றை கழற்றி திருட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் த ற்போது பாலம் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது. பாலத்தில் இரும்புக்காக திருடப்பட்டுள்ள பாகங்களின் பெறுமதி 10 தொடக்கம் 15 மில்லியன் வரை ஆகும். ஆனால் அதனை இரும்புக்காக விற்றால் ஒரு இலட்சம் வரையே வி ற்பனை செய்ய முடியும்

மக்களின் பயன்பாட்டில் உள்ள நாளாந்தம் அதிகளவான மக்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து மார்க்கத்தில் உள்ள பிரதான வீதி ஒன்றின் முக்கியமான பாலத்தின் பாகங்கள் இரும்புக்காக திருடப்பட்டமை மன்னிக்க முடியாத சம்பவம்
தெய்வாதீனமாக இதுவரை எவ்வித விபத்துக்களும் இடம்பெறவில்லை. தற்போது குறித்த பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்தினை கனரக வாகனங்கள் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும், பேரூந்துகளின் பயணிகள் ஏற்றிச் செல்லப்படும் போது பாலத்தின் ஒரு புறத்தில் பயணிகளை இறக்கி மறுபுறத்தில் ஏற்றிச் செல்லுமாறும் இலகுரக வாகனங்களான (சிறிய வாகனங்கள்) மெதுவாக பிரயாணம் செய்ய வேண்டும் கனரக வாகனங்கள் பிரயாணம் செய்ய முடியாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பிரிதானியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்ட பாலமே இது.

எனவே இந்த பாலத்தின் திருடப்பட்ட பாகங்கள் தொடர்பில் தகவல்களை கொழும்புக்கு அறிவித்துள்ளதாகவும், அங்கு பாலத்தின் பாகங்கள் இருப்பின் மீண்டும் பெற்று பொருத்த முடியும் தவறின் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்படும் என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்