Mon. May 13th, 2024

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னங்கண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள்

 

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னங்கண்டி கிராமத்தில் சுமார் அறுபது குடும்பங்கள் வரை அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வசித்து வருகின்றனர்

 

முப்பது வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த காலத்தில் தமக்கு குடியிருக்க வழங்கப்பட்டதாகவும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து 2010 ம் ஆண்டு மீள குடியமர்ந்ததன் பின்னர் அக் காணிக்கு தனியார் ஒருவர் உரிமை கோரிய நிலையில் அவர் தனக்கு பரபபிற்க்கு குறைந்தது 80000/- ரூபா தர வேண்டும் என்றும் அவ்வாறு தராத எவருக்கும் தன்னால் காணி எழுதி தர முடியாது என்றும் இருக்கின்ற நிலையில் தமக்கு வீட்டுத் திட்டம் பெற்றுக் கொள்வதற்கு காணி உறுதி வழங்க முடியாமல் போனதால் தமக்கு வீட்டுத் திட்டம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அரசு மானியமாகவோ அல்லது நீண்டகால கடன் உதவியையாவது பெற்றுக் தந்து தமக்கு விட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ள உதவுமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கடந்த சில வருடங்களாக தாம் பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எந்தவித பயனும் கிட்டவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் காணி இல்லாதவர்களுக்கு ரூபா நான்கு இலட்சம் வரை அரசு மானியம் வழங்கியிருந்ததும் குறிப்பிட தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்