Fri. May 17th, 2024

கருணாகரன் உதைபந்தாட்ட அக்கடமி அங்குரார்ப்பணம்

விளையாட்டின் வெற்றிக்கு உடல் பலத்தை விட மன பலமே முக்கிய பங்காற்றுகிறது. உடல் ரீதியாக வெற்றிக்கு 20 சதவீதம் தன்னைத் தயார்படுத்தும் அதேவேளை இறுதி நிமிடம் வரை மனம் சளைக்காமல் போட்டியில் பங்குபற்றினால் வெற்றி நிச்சயம் என வடமாகாண பயிற்றுநரும், வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் செயலாளருமான பாலகிருஷ்ணன் முகுந்தன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன்
” கருணாகரன் உதைபந்தாட்ட அக்கடமியின்” அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கடமியின் அங்குரார்ப்பண திரைச்சீலையை உத்தியோக பூர்வமாக யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுநரும், வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் செயலாளருமாகிய பா. முகுந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,  மெய்வன்மை போட்டியில் கலந்து கொள்ளும் வீரரை தயார்படுத்த குறித்த ஒரு வீரருடன் மட்டும் நேரத்தை செலவிட்டால் இலக்கை அடைய முடியும்.
ஆனால் உதைபந்தாட்டத்தில் பேற்றுக் காப்பாளர் உட்பட ஒவ்வொரு பிரதேசத்திலும் விளையாடும் ஒவ்வொரு வீரர்களையும் மற்றும் தனித்தனியே அவர்களின் ஆளுமைகளையும் இனங்கண்டு எவ்வாறு ஏனைய வீரர்களுடன் இணைந்து விளையாட வேண்டும் என பயிற்றுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அத்தோடு கருணாகரன் விளையாட்டு கழக பயிற்றுநர்களுக்கு பயிற்சி நுட்ப முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்