Fri. Jun 14th, 2024

கரவெட்டி வைத்தியசாலையில் நோயாளரை பரிசோதிக்காமல் மருந்தெழுத்தும் வைத்தியர்

24.06.2020. இன்று கரவெட்டி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவர் மருந்து எடுப்பதற்காக வைத்தியசாலைக்கு 10 45 க்கு சென்றுஉள்ளார். ஆண் வைத்தியர் அவர்கள் அவர் இருக்கும் அறைக்கு யாரும் உள்நுழையாதவாறு ரிபன் ஒட்டப்பட்டுள்ளது. கதவு வாசலில் அங்கு வேலை செய்பவர்கள் காவல் நிற்கின்றனர்.

இந்த நிலையில் நோயாளி வாசலில் நின்றவாறே எனக்கு தும்மல் சளி எனக் கூரியபொழுது, வைத்தியர் எந்த பரிசோதனையும் செய்யாமல் மருந்து எடுப்பதற்கு சீட்டை எழுதிக் கொடுக்கிறார். இதனால் மனவேதனை அடைந்த நோயாளி வைத்தியரைப் பார்த்து ஏனய்யா பரிசோதனைகள் செய்ய மாட்டீர்களா எனக் கேட்ட பொழுது, வைத்தியர் கொரோனா வந்தபடியால் பார்க்க முடியாதென பதில் கூறினார்.

இதே வைத்தியசாலையில் உள்ள பெண் வைத்தியர் கவனமாக எல்லாரையும் பரிசோதனை செய்து மருந்து வழங்குகின்றர். ஆண் வைத்தியர் மட்டுமே நோயாளிகளை பரிசோதனை செய்யாமல் மருந்து வழங்கி வருகிறார்.   காயங்களுடன் வருபவர்களுக்கு கூட பார்ப்பதில்லை என்று நோயாளர்கள் கவலை வெளியிட்டார்கள்

கரவெட்டி வைத்தியசாலை நவீன முறையில் கட்டப்பட்டு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் வைத்தியர்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் பரிசோதனை செய்வது இல்லை. இதே வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்லும் போது அவர்கள் பரிசோதனை செய்து அன்பு கனிந்த வார்த்தைகள் பேசி மருந்தை தருகின்றார்கள்.

காசில்லாத வறுமை கோட்டின் கீழ் வாழும் மகளுக்கு வைத்தியர்களின் சீறலும் சினப்பும் தான் மருந்தா என்று அங்கிருந்த நோயாளி ஒருவர் கோபமாக எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்