Sun. May 19th, 2024

கரவெட்டி மற்றும் நெல்லியடி பிரதேசங்களின் தற்போதைய நிலைமை

27.03. இன்று கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பத்தஞ்சு கிராமசேவகர் பிரிவுகளிலும் கரவெட்டி பிரதேச செயலர் ஈ,தயாரூபன் அவர்கள் நாளாந்தம் வேலை செய்யும் குடும்பங்களின் நிலையை அறிந்து உடனடியாக அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்து கொண்டிருக்கின்றார். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒரு தொகுதி பொருட்களை கரவெட்டி பிரதேச செயலக ஊடாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமுர்த்தி கொடுப்பனவை அந்த வங்கிக் கிளைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரங்களில் கிராம சேவையாளர்கள் சமுர்த்தி ஊழியர்கள்  சிரமங்களை பாராது சேவையாற்றி கொண்டிருக்கின்றார்கள். பிரதேச செயலர் காலையிலிருந்து மாலை வரையும் தனது சேவையை மக்களுக்காக வெயிலும் பார்க்காமல் தொடர்ந்து சேவையாற்றி கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. நெல்லியடி நகரில் மருந்தகங்கள் வெதுப்பகம்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கும் கடைகள் பொருட்களை வழங்கி கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் மிகவும் அவதானமாக அவர்களை அங்கிருந்து அகற்றி கொண்டிருக்கின்றார்கள்.போலீஸார் தங்களுடைய கடமைகளை அவதானத்துடன் செயல்படுவதை  காணக்கூடியதாகவுள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்