Sat. May 18th, 2024

கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி எல்லேயில் சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலக  இளைஞர் கழகங்களுக்கிடையிலான ஆண்களிற்கான எல்லே போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி சம்பியனாகியது.
யாழ் மாவட்ட பிரதேச செயலக  இளைஞர் கழகங்களுக்கிடையிலான ஆண்களிற்கான எல்லே போட்டி இன்று  சனிக்கிழமை அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக  இளைஞர் அணியை எதிர்த்து மருதங்கேணி  பிரதேச செயலக இளைஞர் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மருதங்கேணி  பிரதேச செயலக  இளைஞர் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 பந்துகளில் 2 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் சாயிகன், சயந்தன் ஆகியோர் ஒவ்வொரு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி 10 பந்துகளிலேயே 3 ஓட்டுக்களைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். அவ்வணி சார்பில் நரேன் 2ஓட்டங்களையும், அம்சன் ஒரு ஓட்டத்தையும் பெற்றுக் கொடுத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்