Fri. May 17th, 2024

கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி மாவட்ட சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலக இளைஞர் அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்டத் தொடரில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் பிரதேச செயலக இளைஞர் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்