Tue. May 21st, 2024

கரவெட்டி பிரதேச சபையின் கூட்டம் இன்று இடம்பெற்றது

18.06.2020 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐயங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது பிரதேச சபையின் நிதி மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கக்கூடிய திட்டங்களை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துமாறு கருத்து தெரிவிக்கப்பட்டது . மேலும் வல்லை வெளியில் 10 ஏக்கர் காணி இருப்பதாகவும் அதே பிரதேச செயலர் தருவதாகவும் கூறியுள்ளார். அவ்விடத்தை உல்லாச துறைக்குதகுந்த இடமாக இருப்பதனாலும் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்வோம் என்று கருத்து முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் பொழுது பனை தென்னை வள அபிவிருத்தி செய்து உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியுமென்று கூறியதுடன் பலாலியில் உள்ள விமான நிலையத்தில் பனை தென்னை வள பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய முடியும் எனவும் கூறினார்.
இதனிடையே கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் மாதந்தை அறிக்கையில் வருவதில்லை என கூறியதுடன் பிரதேச சபைக்குரிய இரண்டு உப அலுவலகங்கள் குப்பையும் கூளமுமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தினர்.
மேலும் உறுப்பினர்கள் வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து தமது பகுதிகளுக்கு உரிய வீதிகளை புனரமைப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தவண்ணம் இருந்தனர் . இதற்கு கருது தெரிவித்த தவிசாளர் சந்தை வருமானம் குறைவாக உள்ளதால் அவ்வாறான செயல்பாடுகளை தற்பொழுது செய்யமுடியாது என்று தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்