Sat. May 18th, 2024

கரவெட்டி தவிசாளரின் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

மூன்று வருட இடைவெளியின் பின்னர் கரவெட்டி சண்டில்குள மக்களின் அவலநிலையை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தீர்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சண்டில்குளத்தில் இருந்து மழைநீர் வெளியேறும் ஒரே வழியாக கரவெட்டி விக்னேஸ்வரா பின் வீதி காணப்படுகிறது.  இவ் வீதி  2018ம் ஆண்டு வீதி புனபுனரமைக்கப்பட்டு சாதாரண உயரத்தைவிட 3அடி உயர்த்தப்பட்டு கொங்கிறீற் வீதி போடப்பட்டுள்ளது.  இதனால் மழை நீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.  இது தொடர்பாக தமது பிரதேச சபை வட்டார உறுப்பினர் உட்பட பலரிடம் முறையிட்ட போதிலும் எதுவித பயனும் கிடைக்கவில்லை.  இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களிடம் தெரிவித்த போது இன்று (29) நேரடியாக பார்வையிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் கொங்கிறீற் வீதிக்கு அருகாமையில் வாய்கால் ஒன்றை வெட்டி சுமார் 80ற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த நீரை வெளியேற்றி வயல் நிலத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களின் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்