Mon. May 13th, 2024

கரப்பந்தாட்ட பயிற்சி முகாம் யாழில்

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறியானது எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது என யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் ப.நிதர்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த பயிற்சி நெறியில் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கரப்பந்தாட்ட பயிற்றுவித்தலில் ஆர்வமுள்ள கரப்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.
மேற்படி பயிற்சி நெறியில் கரப்பந்தாட்ட பயிற்றுவித்தல் தொடர்பான நுட்பங்கள் மற்றும் நவீன பயிற்றுவித்தல் வழிமுறைகள் போன்ற விடயங்கள் பயனாளிகளிற்கு கற்றுத்தரப்படும்.
குறித்த பயிற்சி முகாமில் சர்வதேச கரப்பந்தாட்ட பயிற்சி நெறியில் தேர்ச்சிபெற்ற, இலங்கை தேசிய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் பயிற்றுவிப்பாளர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்படி பயிற்சி நெறியில் கலந்துகொள்பவர்களிற்கு இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அதேவேளை, இதன் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள ஏனைய பயிற்சி நெறிகளிற்கு தகுதிபெறுவதற்கு/ தேர்வு செய்யப்படுவதற்கு இந்த பயிற்சி முகாமில் பங்கெடுத்திருப்பது ஓர் அடிப்படை தகுதியாக கருதப்படும்.
இந் நிகழ்சியின் தொடர்ச்சியாக, தேசிய ரீதியில் கரப்பந்தாட்டத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களை உருவாக்குவதுடன், அவர்களில் திறமையினை நிரூபிப்பவர்களிற்கு AVC, FIVB பயிற்சி நெறிகளில் பங்கெடுப்பதற்கு முன்னுரிமையளிக்கப்படுவதுடன்; எதிர்காலத்தில் நடத்தப்படும் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கெடுக்கும் அணிகளின் பயிற்றுவிப்பாளர் குழாமில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பினை பெறுவதற்கும் சந்தர்பாபமாக அமையும்.
கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தங்கள் திறன்களினையும், அறிவினையும் ஆற்றலினையும் வளர்த்துக்கொள்வதுடன் கரப்பந்தாட்டத்தினை எமது பிரதேசத்தில் முன்னேற்றுவதற்கும், தேசிய ரீதியில் சாதிப்பதற்குமான எமது பயணத்தில் நீங்களும் ஒரு பங்குதாரராக மாறுவதற்கான முதலாவது பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
பயிற்சி முகாமில் பங்கெடுத்திருப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க செயலாளர் ப.நிதர்சன்( +94771751340) அவர்களை தொடர்புகொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்