Sun. May 19th, 2024

கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சொகுசு பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்துக்கு

சமீபகாலமாக A-9 வீதியில் ஏற்படும் விபத்துகள் காரணமாக சொகுசு பேருந்துகளை மக்கள் விமனநிலையத்துக்கும் கொழும்பு -யாழ்ப்பாணம் சென்றுவருவதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். அதன் இருக்கைகள் ஹாயஸ் வாகனங்களுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் வசதியாக இருப்பதாலும் நீண்ட தூர பயணத்துக்கு மற்றைய சிறு வாகனங்களுடன் ஒப்பிடும்பொழுது இவை மிகவும் சௌகரியமானவை .
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே செல்லும் சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க விமானநிலையம் செல்வதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தினமும் ஓரிரு பேருந்துகள் காலையும் மாலையும் விமனநிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை ஏற்றி இறக்கி வந்தன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் சொகுசு பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு பயணிப்பவர்கள் கட்டுநாயக்க விமனநிலையத்துக்கு சமீபமாக உள்ள நீர்கொழும்பு வீதிக்கு( 2 Km ) சென்றே அங்கிருந்து சொகுசு பஸ்ஸை பிடிக்க முடியும்.
விமான நிலையத்தில் இருந்து 500-1000 ரூபா கொடுப்பதன் மூலம் வாடகை காரில் செல்லமுடியும். அநேகமான நேரத்தில் ஏர்போர்ட் டாக்சியில் தொடர்பு கொள்வதன் மூலம் இதனை ஒழுங்கு செய்யமுடியும். நீங்கள் அங்கே இறங்கியவுடனேயே இதனை செய்யக்கூடிய நிலைமை உண்டு.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை வேளை விமான நிலையம் செல்லும் பயணிகள், அதிகாலை 3-5 மணியளவில் நீர்கொழும்பு சந்தியில் இறக்கிவிடப்படுகின்றார்கள். அங்கிருந்து விமான நிலையம் செல்ல அதிகாலை வேளையில் ஆட்டோகள் மாத்திரமே உள்ளன. உபர் போன்ற சேவைகள் இருப்பினும் அந்த நேரத்தில் எவரும் ஏர்போர்ட் ஓட்டத்துக்கு வரமாட்டார்கள். இதனால் அந்த பஸ் நிலையத்தில் நிற்கும் ஆட்டோகள் தான் ஒரே வழி. இதனை அறிந்து வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர்கள், விமான நிலையம் செல்ல 2000 ரூபா வரையில் அறவிட முயற்சிக்கிறார்கள். ஒரு குடும்பம் பயணப்பொதிகளுடன் சென்றால், இரண்டு ஆட்டோ தேவை என்று சொல்லி 4,000 ரூபா வரையில் அறவிட்ட சம்பவங்களும் உண்டு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆட்டோக்களை விமான நிலையம் மட்டும் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால் ஆட்டோவில் செல்வோர் இடையவழியில் உள்ள பாதுகாப்பு கடைவயில் இறக்கிவிடப்படுவார்கள். அங்கிருந்து செல்ல ஏர்போர்ட் shuttle சேவைக்கு காவல் நின்றே மிகுதி தூரத்துக்கு செல்லமுடியும். இதனால் அதிகாலை வேளை சொகுசு பேருந்தில் செல்வோர் மேற்கொண்ட விமனநிலையத்துக்கான வாகனத்தின் ஒழுங்கு தொடர்பில் கவனம் செலுத்துதல் நன்று.

இங்கே 4000 ரூபா என்பது எம்மவர் பலருக்கு வெறும் 20 பவுண்ட்ஸ் ஆக இருக்கும். ஆனால் நீங்கள் விடும் இந்த தவறால் மேலும் மேலும் ஏமாற்று வேலைகளை ஊக்குவிப்பதாக அமைவதுடன், தமிழன் என்றால் ஏமாத்தலாம் என்ற ஒரு மனநிலையை அங்கு இது ஏற்படுத்துவதாக அமையும்..

நியூஸ் தமிழுக்காக ஒரு வாசகர் எழுதி அனுப்பியது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்